Posts

Showing posts from March 6, 2018

Aayirangal Paarthalam lyrics

ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே

Valakkamal Ennai Thalayakkineer lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்  கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்  உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தனும் நெருங்க முடியல அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்று தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க வந்தீங்க முட்செடியினில் என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

Nandri solli ummai paada vanthom lyrics

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை  காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்  வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

Yahwey rofeka levi 4 lyrics

பறந்து காக்கும்  பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே   வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே   யாவே யாவே ரொஃபேகா Yahwey Rofeka   என் சார்ப்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் நீர் கொண்ட தழும்புகளால் நிரந்திர சுகத்தை தந்தவரே   யாவே யாவே ரொஃபேகா Yahwey Rofeka   உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும் ஆவியே

Thirantha Vasalai Levi-4 lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க நான் நெனைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க   நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி நன்றி தேவா உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா   நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி நன்றி தேவா உங்க கிருபையில வாழுகிறோம் நாதா   வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு கண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சது உங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினது வார்த்தையினால இழந்ததெல்லா திரும்ப வந்தது  கிருபையினால   ஏசேக்கு போனதால கவலையே இல்லை சித்னாவும் போனதால கவலையே இல்ல இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால

Maravamal Nenaitheeriya | Fr Berchmans | Ben Samuel | Cover | Tamil Christian Songs | Worship Songs

https://youtu.be/tIZvu2PpcMo

Ootridume um vallavamiayai lyrics

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை - இந்த நாளில் எங்கள் மேலே வல்லமையோடே வல்லமை... வல்லமை... தாருமே தேசத்தை உமக்காக கலக்கிட அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்பிட பெந்தெகொஸ்தே நாளில் செய்து போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல இன்றும் செய்ய வேண்டுமே மாம்சமான யாவர்மேலும் ஊற்றுவேனென்ற வாக்குத்தத்த ஆவியை ஊற்ற வேண்டுமே நீச்சம் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே

Aarathipen naan padal tamil lyrics

ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம் நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்குச் சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா குப்பைக்குள் கிடந்தேன் நான் தூசியாக இருந்தேம் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே துக்கத்தில் இருந்த போது கலக்கத்தோடு நடந்த போது- அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே காலங்கள் கடந்து சென்று நாட்கள் எல்லாம் மாறிட்ட - நீர் செய்த நன்மையை நான் என்று நினைப்பேன்

Ellamae maara poguthu song lyrics

எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது மாறப்போகுதே, மாறப்போகுதே இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே அது விசாலமாய் மாறப்போகுதே என் ஜெபநேரம் அதிகமாகுதே என் துதிநேரம் அதிகமாகுதே அக்கினியா மாறப்போகுதே வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே என் கவலையெல்லாம் மாறப்போகுதே என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே என் அழுகையெல்லாம் மாறப்போகுதே அது ஆனந்தமாய் மாறப்போகுதே