Posts

Showing posts from September 5, 2018

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும் 2. பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத்தாரும் பிதாவே என்று அழைக்க

Vallamai Undu Undu Arputha Vallamai song lyrics- வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தில்! வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!

Um Naamam Uyaranume Tamil lyrics - உம் நாமம் உயரணுமே

உம் நாமம் உயரணுமே உம் அரசு வரணுமே உம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதாவே அப்பா (4) 1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும் எனக்குத் தாரும் ஐயா.. 2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் குறைகளை மன்னியுமே.. 3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுதலை தாருமையா.. 4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை என்றென்றும் உமக்கே சொந்தம்.. 5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் சமாதானம் வரணுமே.. 6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும் உம் வசனம் சொல்லணுமே.. 7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும் உம்மோடு இணையணுமே.. 8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட கிருபை தாருமையா.. 9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க ஆர்வம் தாருமையா 10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும் இரட்சிப்பு அடையணுமே 11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள் உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே

Um Magimaiyai Naan Kana tamil lyrics - உம் மகிமையை நான் காண வேண்டும்

உம் மகிமையை நான் காண வேண்டும் உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும் மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும்

Ulagor Unnai Pagaithalum tamil lyrics - உலகோர் உன்னைப் பகைத்தாலும்

1. உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா? (2) உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? (2) உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) 2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா? (2) – உனக்காக 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2) மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) – உனக்காக 4. இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2) பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயோ? (2) – உனக்காக 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே (2) யாரை நான் அனுப்பிடுவேன் யார் தான் போவார் எனக்காக (2) – உனக்காக

Ugantha Kaanikkayai tamil song lyrics - உகந்த காணிக்கையாய்

உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் – உகந்த 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என் 4. அப்பா உம் சமூகத்தில் ஆர்வமாய் வந்தேனையா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாக பயன்படுத்தும்

Udavi Varum kanmalai tamil lyrics

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

Udalai Kodu Ullathai Kodu tamil song lyrics

உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் 1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு உன்னை தேவன் உயர்த்துவாரு பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடனில்லாமல் நடத்துவாரு 2. நன்றிப்பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும்வென்றிடு 3. தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிரார்த்தனை செய்திடு ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் 4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் 5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு வீடுகள் தோறும் விடுதலை கூறிடு சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு