Annathi sinekathal


அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

அன்பு பெரியது
இரக்கம் பெரியது
கிருபை பெரியது
தயவு பெரியது

1. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – அன்பு

2. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே – அன்பு

3. தாயின் கருவில் தொன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
நடத்தி வந்தீரே – அன்பு

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனைய்யா – அன்பு

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே – அன்பு

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது