அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் | Analaavi thinanthoarum enaiyaalavaendum lyrics

அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
Analaavi thinanthoarum enaiyaalavaendum
அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
Aviyaamal niraivoadu enai kaakka vaendum

அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
Arulmaari nathiyaaga enil paainthu oadum
கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்
Kanivoadum thunivoadum paniseiya thoondum

1. தெய்வீக சாயல் எனதாக வேண்டும் - என்
Theiveega saayal enathaaga vaendum - en
நிலையான செல்வம் நீராக வேண்டும்
Nilaiyaana selvam neeraaga vaendum

ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் - உம்
Aayul ellaam naan kanithara vaendum - um
வார்த்தை என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
Vaarthai en vaazhvai sezhippaakka vaendum

2. நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என்
Nithiya paarvai nalnoakkam vaendum - en
இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும்
Ithayathin ennanggal neer kaanavaedum

பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என்
Palantharum ummeethu manam oondravaendum - en
ஆசை பசி தாகம் நீராக வேண்டும்
Aasai pasi thaagam neeraaga vaendum

3. விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் - என்
Visuvaasam enakkullae nilaithoangga vaendum - en
ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
Janamellaam Yaesuvai paninthaaga vaendum

வழிவழியாய் வாழ்ந்தும்மை  சேவிக்கவேண்டும் - என்
Vazhivazhiyaai vaazhnthummai saevikkavaendum - en
தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
Thaainaadu siluvaikku saranaagavaendum

4. களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் - என்
Kalanggamillaamal naan vaazhnthidavaendum - en
காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
Kaalamellaam um paniseiyavanedum

கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் - பின்
Kadamai mudithae naan kanmoodavaendum - pin
மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்
Mahimaiyil ummugam tharisikkavaendum


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது