Posts

Showing posts from January 31, 2016

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு -Kristhuvukkul vaazhum enakku tamil song Lyrics

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு  எப்போதும் வெற்றி உண்டு 2   1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்  யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்   2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்  குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்   3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்  சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்   4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்  இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்   

Unga Kirubai Thaan Ennai tamil song lyrics – உங்க கிருபைதான் என்னை

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2