Posts

Showing posts from March 20, 2024

Aaravaram aarpattam appa sanidhiyil Tamil Christian song lyrics

 ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் Aaravaram aarpattam appa sanidhiyil நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் Nalellam kondattam nallavar munnilaiyil நன்றி பாடல் தினமும் பாடு(வோம்) Nandri paadal dhinamum paadu (vom) நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) Nalla devan uyarthi paadu (vom) 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் Kalvari siluvaiyilae karthar  இயேசு வெற்றிச்சிறந்தார் Yesu vetrichirandhar கண்ணீரை மாற்றி நம்மை Kanneerai matri namai காலமெல்லாம் மகிழச் செய்தார் Kalamellam magizhachaeidhar 2. கிறிஸ்துவை நம்பினதால் Krishthuvai nambinadhal பிதாவுக்குப் பிள்ளையானோம் Pidhavuku pillaiyanom அப்பான்னு கூப்பிடப்பண்ணும் Appannu koopidapanum ஆவியாலே நிரப்பப்பட்டோம் Aaviyalae nirapapattom 3. உயிர்த்த கிறிஸ்து நம்ம Uyirtha kristhu namma உள்ளத்திலே வந்துவிட்டார் Ullathillae vandhuvittar சாவுக்கேதுவான நம்ம Savukaedhuvana namma சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் Sareerangalai uyirpidkindar 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும் Aaviketra bali seluthum ஆசாரிய கூட்டம் ...

Amen alleluiah magathuva thambaraapara Tamil Christian song lyrics

 ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா Amen alleluiah magathuva thambaraapara ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த தோத்திரா Amen alleluiah jeyam jeyam anantha thoathiraa ஓம் அனாதி தந்தார் வந்தார் Oஅm anaathi thanthaar vanthaar இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே Iranthuyirthezhunthaar unnathamae 1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும் Vetri kondaarparithu kodum வேதாளத்தைச் சங்கரித்து முறித்து Vethaalathai sangarithu murithu பத்ராசனக் கிறிஸ்து மரித்து Pathrasana kristhu marithu பாடுபட்டுத் தரித்து முடித்தார் Padu pattu tharithu mudithaar 2. சாவின் கூர் ஒடிந்து மடிந்து Saavin koor odinthu madinthu தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து Thaduppu suvar idinthu vizhunthu ஜீவனே விடிந்து தேவாலயத் Jeevanae vidinthu thevaalaya திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது Thirai randaai kizhinthu ozhinthathu 3. வேதம் நிறைவேற்றி மெய்தோற்றி Vaetham niraivaetri meithoattri மீட்டுக் கரையேற்றி பொய்மாற்றி Meetu karaiyetri poimaatri பாவிகளைத் தேற்றி கொண்டாற்றி Paavikalai thaetri kondaatri பத்ராசனத் தேற்றி வாழ்வித...

Aanandha kalippulla uthadugalaal Tamil Christian Songs lyrics

 ஆனந்த களிப்புள்ள உதடுகளால் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanandha kalippulla uthadugalaal போற்றிப் புகழ்கின்றேன் - 2 Poattri pugazhgindraen அறுசுவை உணவு உண்பது போல் Arusuvai unavu unbadhupol திருப்தி அடைகின்றேன் Thirupthi adaigindrean  தினமும் துதிக்கின்றேன் Thinamum thuthikkindraen 1. மேலானது உம் பேரன்பு Maelanaadhu um paeranbu உயிாினும் மேலானது -2 Uyirinum maelaanadhu உதடுகள் துதிக்கட்டும் Uthadugal thuthikkattum உயிருள்ள நாளெல்லாம் - 2  Uyirulla naalellaam உயிருள்ள நாளெல்லாம் Uyirulla naalellaam 2. தேவனே நீா் என் தேவன் Thaevane neer en thaevan தேடுவேன் ஆர்வமுடன் - 2 Thaeduvaen aarvamudan மகிமை வாஞ்சிக்கின்றேன் Magimai vaanjikkindraen உம் வல்லமை காண்கின்றேன் - 2 Um vallamai kaangindraen வல்லமை காண்கிறேன் Vallamai kaangindraen 3. நீா்தானே என் துணையானீ்ா Neerthaanae en thunaiyaneer உம் நிழலில் களிகூறுவேன் - 2 Um nizhalil kalikooruvaen உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் Uruthiyaai pattrikkondaen உம் வலக்கரம் தாங்குதையா - 2 Um valakkaram thaanguthaiyaa  வலக்கரம் தாங்குதையா Vala...

Aathumamae en muzhu ullamae Tamil Christian Songs lyrics

  ஆத்துமமே என் முழு உள்ளமே ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன் Aathumamae en muzhu ullamae ஆண்டவரைத் தொழு தேத்து Un aandavarai thozhuthaethu இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் Innaal varai anbu vaithaatharitha - Un  ஆண்டவரைத் தொழுதேத்து Aandavarai thozhuthaethu 1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர் Poatridum vaanoar poothalathulloar சாற்றுதற் கரிய தன்மையுள்ள Saatrutharkariya thanmaiyulla 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத Thalaimurai thalaimurai thaanggum vinoadha உலக முன் தோன்றி ஒழியாத Ulaga mun thoandri ozhiyaatha 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான Thinam thinam ulagil nee sei palavaana வினை பொறுத் தருளும் , மேலான  Vinai porutharulum maelaana 4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , ஆனந்த Vaathai noai thunbam maatri aanantha ஓதரும் தயைசெய் துயிர் தந்த  Oatharum thayaisei thuyir thantha 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், Uttrunak kiranggi urimai paaraattum முற்றும் கிருபையினால் முடி சூட்டும்  Mutrum kirubaiyinaal mudi soottum 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, Th...

Aathiyum neerae anthamum neerae Tamil Christian Songs lyrics

 ஆதியும் நீரே அந்தமும் நீரே ஆதியும் நீரே அந்தமும் நீரே Aathiyum neerae anthamum neerae மாறிடா நேசர் துதி உமக்கே Maaridaa naesar thuthi umakkae தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து Thaeva sabaiyil vaazhthil pugazhnthu எந்நாளும் துதித்திடுவோம் Ennaalum thuthithiduvoam 1.தூதர்கள் போற்றும் தூயவரே Thootharhal poattrum thooyavarae துதிகளின் பாத்திரர் தேவரீரே Thuthihalin paathirar thaevareerae உந்தனின் சமூகம் ஆனந்தமே Unthanin samooham aananthamae உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் Unthanai poattri puhazhnthiduvoam 2. வல்லமை ஞானம் மிகுந்தவரே Vallamai gnaanam mihunthavarae வையகம் அனைத்தையும் காப்பவரே Vaiyakam anaithaiyum kaappavarae ஆயிரம் பேர்களில் சிறந்தவராம் Aayiram paerkalil siranthavaraam ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் Aandavar Yaesuvil mahizhnthiduvoam 3.செய்கையில் மகத்துவம் உடையவரே Seihaiyil mahathuvam udaiyavarae இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே Irakkamum urukkamum nirainthavarae பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே Parisutha sthalathil thuthiyudanae பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் Parisutha thaeva...

Aandavar padaitha vetriyin naalithu Tamil Christian Songs lyrics

  ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது Aandavar padaitha vetriyin naalithu இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் Indru agamagizhvoam akkalippoam அல்லேலூயா பாடுவோம் Alleluia paaduvoam அல்லேலூயா தோல்வி இல்லை Alleluia thoalvi illai அல்லேலூயா வெற்றி உண்டு Alleluia vetri undu 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் Enakku uthavidum enathu aandavar என் பக்கம் இருக்கிறார் En pakkam irukkiraar உலக மனிதர்கள் எனக்கு எதிராக Ulaga manithargal enakku ethiraaga என்ன செய்ய முடியும் Enna seiya mudiyum தோல்வி இல்லை எனக்கு Thoalvi illai enakku வெற்றி பவனி செல்வேன் Vetri bavani selvaen தோல்வி இல்லை நமக்கு Thoalvi illai namakku வெற்றி பவனி செல்வோம் Vetri bavani selvoam 2. எனது ஆற்றலும் எனது பாடலும் Enathu aatralum enathu paadalum எனது மீட்புமானார் Enathu meetpumaanaar நீதிமான்களின் சபைகளிலே Neethimaangalin sabaigalilae வெற்றி குரல் ஒலிக்கட்டும் Vetri kural olikkattum 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் Thallappatta kal kattidam thaangidum மூலைக்கல் ஆயிற்று Moolaikkal aayitru கர்த்தர் ச...

Aandavarai yekkalamum potriduvaen Tamil Christian Songs lyrics

 ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் Aandavarai yekkalamum potriduvaen அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் Avar pugazh yeppodhum yen naavil olikkum 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் Ennodae aandavarai maghimaipadutthungal ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் Orumitthu avar naamam uyarthiduvom நடனமாடி நன்றி சொல்வோம்.... Nadanamaadi nandri solvom 2. ஆண்டவரைத் தேடினேன் செவிகொடுத்தார் Aandavarai theadinaen sevikodutthar எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் Ellavidha bayatthinindrum viduvitthar 3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் Avarai nokki paarthadhal pragasamaanaen எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல Enadhu mugam vetkkapattu pogavaeyilla 4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே Ezhai naan kuppitaen badhil thandharae நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே Nerukkadigal anaithinindrum viduvittharae 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் Karthar nallavar suvaithu paarungal அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் Avarai nambum manidharaell...

Aatkonda dheivam thirupaadham amarndhu Tamil Christian Songs lyrics

 ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து Aatkonda dheivam thirupaadham amarndhu ஆறுதல் அடைகின்றேன் Aarudhal adaigindraen அமைதி பெறுகின்றேன் Amaidhi perugindraen 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை Puyal veesum kadalil thadumaarum padagai தாங்கிடும் நங்கூரமே (3) தினம் Thaangidum nanguramae (3) dhinam 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச Yethirkaatru vessa yethirpoorum peasa எனைக் காக்கும் புகலிடமே – தினம் Yenai kaakkum pugalidamae – dhinam 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே Nilaiyattra vazhvin nimmadhiyae நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு Neengaadha paerinbamae – yennai vittu 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா Yirul neekum sudarae yen yesu raaja என் வாழ்வின் ஆனந்தமே Yen vaazhvin aanandhamae 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா Manathurugum dheva manikkum naatha மாபெரும் சந்தோஷமே Maapaerum santhoshamae 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் Kaayangal aatri kanneerai thudaikkum நல்ல சமாரியனே Nalla samaariyanae

Aahadhadhu ethuvumillai – ummaal Tamil Christian Songs lyrics

 ஆகாதது எதுவுமில்ல - உம்மால் ஆகாதது எதுவுமில்ல - உம்மால் Aahadhadhu ethuvumillai – ummaal ஆகாதது எதுவுமில்ல Aahadhadhu ethuvumillai அகிலம் அனைத்தையும் Agilam anaithayum உண்டாக்கி ஆளுகின்றீர் Undakki aalukindreer 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் Thuthi seyya thodangiyathum ethirikal thangalukkul வெட்டுண்டு மடியச் செய்தீர் Vettundu madiyach Seitheer உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் (2) Ummaal aakum, ellam aakum (2) 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று Alangaara vaasaliley alangola mudavanandru நடந்தானே இயேசு நாமத்தில் Nandanthaney essu Namathil 3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு Kolum Kaiyumaaga pilaikka chendrar yakkobu பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் Peruha cheitheer perungootamaai 4. கண்ணீரைக் கண்டதாலே Kanneerai kandadhaley கல்லறைக்குச் சென்றவனை Kallaraikku chenndravanai கரம் பிடித்துத்தூக்கி விட்டீர் Karam pidithu thookki vitteer 5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று Issackku jebithathaley rebeccal karuvuttru இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே Erattayarga...

Alaganavar arumaiyanavar inimaiyanavar Tamil Christian song lyrics

 அழகானவர் அருமையானவர் அழகானவர் அருமையானவர் இனிமையானவர் Alaganavar arumaiyanavar inimaiyanavar மகிமையானவர் மீட்பரானவர் Magimaiyaanavar Meetparaanavar அவர் இயேசு இயேசு இயேசு - 2  Avar Yesu Yesu Yesu - 2 1. சேனைகளின் கர்த்தர் நம் Senaigalin karthar nam மகிமையின் ராஜா Magimaiyin raja என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் Enrum nammodirukkum immanuvelar இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் Immattum inimelum enthan nesar என்னுடையவர் என் ஆத்ம நேசரே Ennudaiyavar en aathma nesarey 2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர் Kanmalaiyum kottaiyum thunaiyumanavar ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் Aatri thetri kaathidum Thaayumanavar என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா Enrendrum nadathidum enthan raja என்னுடையவர் என் நேச கர்த்தரே Ennudaiyavar en nesa kartharey 3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே Kalvari mettilae kolkathaaviley நேச இரத்தம் சிந்தியே Nesa iratham sinthiye என்னை மீட்டார் Ennai meettaar பாசத்தின் எல்லைதான் இயேசு ராஜா Paasathin ellaithan Yesu raja என்னுடையவர் என் அன்பு இரட்சகர் Ennudai...

Alleluiah thuthi magimai Tamil Christian Songs lyrics

 அல்லேலூயா துதி மகிமை அல்லேலூயா துதி மகிமை என்றும் Alleluiah thuthi magimai இயேசுவுக்கு செலுத்திடுவோம் Endrum Yesuvukku Seluthiduvoam ஆ.. ஆ... அல்லேலூயா (3) - 2 Aa.. Aa.. Alleluiah (3) – 2 1.மோட்சத்தை அடைந்திடவே Motchathai adainthidavae பாடுகள் பட வேண்டும் Paadugal pada vendum பாடுகள் மத்தியில் பரமன் Paadugal mathiyil paraman இயேசுவில் நிலைத்து நிற்கவேண்டும் Yesuvil nilaithu nirkka vendum 2. ஜெபத்திலே தரித்திருந்து Jebathilae tharithirunthu அவர் சித்தம் நிறைவேற்று Avar sitham niraivetru முடிவுபரியந்தம் அவரில் நிலைநிற்க Mudivu pariyantham avaril பெலனை பெற்றுக்கொள்ளு Nilainirkka belanai petrukollu 3. சென்றவர் வந்திடுவார் Sendravar vanthiduvar என்னை அழைத்து சென்றிடுவார் Ennai azhaithu sendriduvaar அவருடன் செல்ல ஆயத்தமாவோம் Avarudan sella aayathamaavoam அவருடன் வாழ்ந்திடவே Avarudan vaazhnthidavae

Allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungkal Tamil Christian song lyrics

 அல்லேலூயா கர்த்தரையே 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungkal அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் Avar nataththum cheyalkalellaam paarththoarae thuthiyungkal வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்  Vallamaiyaay kiriyai cheyyum valloaraith thuthiyungkal எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் Elloaraiyum aetrrukkollum iyaesuvaith thuthiyungkal இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்  Iraajaathi iraajanaam iyaesuraajan பூமியில் ஆட்சி செய்வார்  Poomiyil aatchi cheyvaar அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa தேவனைத் துதியுங்கள் Thaevanaith thuthiyungkal 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்  Thampuroatum, veenaiyoatum karththaraith thuthiyungkal இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் Raththaththinaal paavangkalaip poakkinaar thuthiyungkal எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் Ekkaalamum , kaiththaalamum muzhangkitath thuthiyungkal எக்காலமும் மாறாதவர் இய...

Alangaara vasalaalae Tamil Christian song lyrics

 அலங்கார வாசலாலே அலங்கார வாசலாலே  Alangaara vasalaalae பிரவேசிக்க வந்து நிற்கின்றோம்  Pravaesikka vanthu nirkindroam தெய்வ வீட்டின் நன்மையாலே  Theiva veettin nanmaiyaalae நிரம்பிட வந்து நிற்கின்றோம்  Nirambida vanthu nirkindroam ஆராதிக்க வந்தோம் அன்புகூர வந்தோம்  Aaraathikka vanthoam Anbukoora vanthoam யேகோவா தேவனையே  Yehoavaa thaevaniyae துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்  Thuthiththida vanthoam Thozhuthida vanthoam தூயவர் இயேசுவையே  Thooyavar Yaesuvaiyae 1. ஆலயம் செல்லுவதே  Aaalayam selluvathae  அது மகிழ்ச்சியைத் தந்திடுமே  Athu magizhchiyai thanthiduthae x2 என் சபையுடனே உம்மை துதித்திடவே  En sabaiyudanae ummai thuthiththidavae கிருபையும் கிடைத்திட்டதே  Kirubaiyum kidaithittathae x2 2. பலிகளை செலுத்திடவே  Paligalai seluththidavae ஜீவ பலியாக மாறிடவே  Jeeva paliyaaga maaridavae x2 மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே  Maruroopaththin ithayaththai thantheerae ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே  Sthoathiram sthoathirama...

Appa veetil eppoathum santhoashamae Tamil Christian Songs lyrics

 அப்பா வீட்டில் எப்போதும் அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே Appa veetil eppoathum santhoashamae ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம Aadalum paadalum ingu thaanae - Namma அல்லேலூயா ஆனந்தமே Alleluiah aananthamae எல்லையில்லா பேரின்பமே Ellaiyilla perinbamae ஆடுவோம் கொண்டாடுவோம் Aaduvoam kondaaduvoam பாடுவோம் நடனமாடுவோம் Paaduvoam nadanamaaduvoam 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் Kaathirunthaar kandu kondaar கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் Kanneerellaam thudaithu vittaar 2. பரிசுத்த முத்தம் தந்து Parisutha muththam thanthu பாவமெல்லாம் போக்கிவிட்டார் Paavamellaam poakkivittar 3. பாவத்திலே மரித்திருந்தேன் Paavathilae marithirunthae புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் Puthiya manithanaai uyirthuvittaen 4. ஆவியென்னும் ஆடை தந்தார் Aaviyennum aadai thanthaar அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் - தூய Athikaaram ennum moathiram thanthaar - Thooya 5. வசனமென்னும் சத்துணவை Vasanamennum sathunavai வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் Vaazhnaalellaam ootugiraar 6. அணிந்து கொண்டோம் மிதியடியை Aninthu kondoam mithiyadiyai ...

Appa pithaavae anbaana thevaa Tamil Christian song lyrics

 அப்பா பிதாவே அப்பா பிதாவே அன்பான தேவா Appa pithaavae anbaana thevaa அருமை இரட்சகரே ஆவியானவரே Arumai ratchagarae aaviyaanavarae 1. எங்கோ நான் வாழ்ந்தேன்  Enggo naan vaaznthaen அறியாமல் அலைந்தேன் Ariyaamal alainthaen என் நேசர் தேடி வந்தீர் En nesar thedi vantheer நெஞ்சார அணைத்து  Nenjaara anaithu முத்தங்கள் கொடுத்து Mutthanggal koduthu நிழலாய் மாறி விட்டீர் Nizhalaai maari viteer நன்றி உமக்கு நன்றி Nandri umakku nandri 2. தாழ்மையில் இருந்தேன்  Thaazhmaiyil irunthen தள்ளாடி நடந்தேன் Thallaadi nadanthaen தயவாய் நினைவு கூர்ந்தீர் Thayavaai ninaivu koorntheer கலங்காதே என்று  Kalangaathae endru கண்ணீரைத் துடைத்து Kanneerai thudaithu கரம் பற்றி நடத்துகிறீர் Karam patri nadathugireer 3. உளையான சேற்றில்  Ulaiyaana settril வாழ்ந்த என்னை Vaazhntha ennai தூக்கி எடுத்தீரே Thookki edutheerae கல்வாரி இரத்தம் Kalvaari rattham எனக்காக சிந்தி Enakkaaga sinthi கழுவி அணைத்தீரே Kazhuvi anaitheerae 4. இரவும் பகலும் Iravum pagalum ஐயா கூட இருந்து Aiyaa kooda irunthu எந்நாளும் காப...

Appa yennai muzhuvadhum arpanithaen aiya Tamil Christian Songs lyrics

  அப்பா என்னை முழுவதும் அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா Appa yennai muzhuvadhum arpanithaen aiya உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா Uyirodirukkum naalellam umakku sondhamaiyaa அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் Arpanithaen (naan) arpanithaen ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என் Aavi aathumaa sareeram arpanithaen –yen 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா Ullam udal yellamae umakku thandhaenaiya கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் Kallam kabadu illamal kaathuk கொள்ளுமையா - ஒரு Kollumaiya –oru 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா Ulagaperumai sittrinbam udhari vitaenaiya கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா Kasappu veruppu kaayangal kadanthu ponadhaiya 3. வாக்குவாதம் பொறாமை (பொறாமைகள்) Vaakuvaadham poraamai (poraamaigal) தூக்கி எறிந்தேன் - நான் Thooki yerindhaen –naan ஆண்டவர் இயேசுவை ஆடையாய் Aandavar yesuvai aadaiyaai அணிந்து கொண்டேன் - நான் Aninthu kondaen –naan 4. உமக்காய் வாழும் வைராக்கியம் Umakkai vaazhum vairakiyam உள்ளத்தில் வந்ததையா Ullathil vant...

Abishaegam en thalaimaelae Tamil Christian Songs lyrics

  அபிஷேகம் என் தலைமேலே அபிஷேகம் என் தலைமேலே Abishaegam en thalaimaelae ஆவியானவர் எனக்குள்ளே Aaviyaanavar enakullae முழங்கிடுவேன் சுவிசேஷம் Mulangiduvaen suvishaesham சிறுமைப்பட்ட அனைவருக்கும் Sirumaipatta anaivarukum அபிஷேகம் என்மேலே Abishaegam enmaelae ஆவியானவர் எனக்குள்ளே Aaviyaanavar enakullae 1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர் Idhayangal noaerukappatoer ஏராளம் ஏராளம் Yaeraalam yaeraalam காயம் கட்டுவேன் தேசமெங்கும் Kaayam katuvaen desamaengum இயேசுவின் நாமத்தினால் Yaesuvin naamathinaal 2. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் Siraiyil ulloar aayirangal விடுதலை பெறணுமே Viduthalai peranumae கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் Kattavilkkanum kattavilkkanum கட்டுக்களை உடைக்கணும் Kattugalai udaukanum 3. துதியின் உடை போர்த்தணுமே Thuthiyin udai poarthanumae ஒடுங்கின ஜனத்திற்கு Odungina janathirku துயரத்துக்குப் பதிலாக Thuyarathuku pathilaaga ஆனந்த தைலம் வேண்டுமே Aanantha thailam vaendumae 4. கிருபையின் கால இதுவன்றோ Kirubaiyin kaala ithuvandrao அறிவிக்கணும் அதிவேகமாய் Arivikanum athivaegamaai இரட்சகர் இயேசு வ...

Anbae kalvaari anbae Tamil Christian Songs lyrics

 அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே  Anbae kalvaari anbae உம்மைப் பார்க்கையிலே Ummai paarkkaiyilae என் உள்ளம் உடையுதப்பா En ullam udaiyuthappaa 1. தாகம் தாகம் என்றீர் Thaagam thaagam endreer எனக்காய் ஏங்கி நின்றீர் Enakkaai aenggi nindreer பாவங்கள் சுமந்தீர் – எங்கள் Paavanggal sumantheer - Enggal பரிகார பலியானீர் Parigaara baliyaaneer 2. காயங்கள் பார்க்கின்றேன் Kaayganggal paarkkindraen கண்ணீர் வடிக்கின்றேன் Kanneer vadikkindraen தூய திரு இரத்தமே Thooya thiru raththamae துடிக்கும் தாயுள்ளமே Thudikkum thaayullamae 3. அணைக்கும் கரங்களிலே Anaikkum karangalilae ஆணிகளா சுவாமி? Aanigalaa suvaami? நினைத்து பார்க்கையிலே Ninaithu paarkkayilae நெஞ்சம் உருகுதையா Nenjam uruguthaiyaa 4. நெஞ்சிலே ஓர் ஊற்று Nenjilae oar ootru நதியாய் பாயுதையா Nathiyaai paayuthaiyaa மனிதர்கள் மூழ்கணுமே Manithargal moozhganumae மறுரூபம் ஆகணுமே Maruroobam aaganumae

Anbae en yaesuvae aaruyirae Tamil Christian song lyrics

 அன்பே என் இயேசுவே அன்பே என் இயேசுவே ஆருயிரே Anbae en yaesuvae aaruyirae ஆட்கொண்ட என் தெய்வமே Aatkonda en thaeivamae 1. உம்மை நான் மறவேன் Ummai naan maravaen உமக்காய் வாழ்வேன் Umakkai vazhlvaen 2. வாழ்வோ சாவோ Vazhlvao saavao எதுதான் பிரிக்க முடியும் Yaethu than pirika mudiyum 3. தாயைப் போல் தேற்றினீர் Thaayai pol thetrineer தந்தை போல் அணைத்தீர் Thanthai pol anaitheer 4. உம் சித்தம் நான் செய்வேன் Um sitham nan saeivaen அதுதான் என் உணவு Athuthan en unavu 5. இரத்தத்தால் கழுவினீர் Irathathal kazhluvineer இரட்சிப்பால் உடுத்தினீர் Iratchipaal uduthineer 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம் Ummaiyandri yaaridam solvom ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா Jeevanula vaarthai neerae - aiya

Anaithaiyum seidhumudikum aatral ullavarae Tamil Christian song lyrics

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே Anaithaiyum seidhumudikum aatral ullavarae நீர் நினைத்தது ஒரு நாளும் தடைப்படாதையா Neer ninaithadhu orunaalum thadaibadaadhaiya 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் Neer mudivedhuthal yardhan maatra mudiyum எனக்கென முன்குறித்த எதையுமே Enakkena munkurittha edhaiyumae எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் Eppadiyum niraivaetri mudithiduveer உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் Umakae aaradhanai uyirulla Naalelaam 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு Naan emmatthiram oru poruttai ennuvadharku காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் Kaalaidhorum kannoki paarkireer நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் Nimidandhorum visarithu magizhgireer 3. என்னைப் புடமிட்டால் (நான்) Ennai pudamittal (Naan)  பொன்னாக துலங்கிடுவேன் Ponnaga thulangiduvaen நான் போகும் பாதைகளை அறிந்தவரே Naan pogum paadhaigalai arindhavarae உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் Undhan sollai unavupola kaathukondan 4. நான்...

Anaathi Thaevan un adaikkalamae tamil Christian Songs lyrics அநாதி தேவன் உன் அடைக்கலமே

 அநாதி தேவன் உன் அடைக்கலமே அநாதி தேவன் உன் அடைக்கலமே Anaathi Thaevan un adaikkalamae அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே Avar niththiya puyanggal un aathaaramae இந்த தேவன் என்றென்றுமுள்ள Intha Thaevan endrendrumulla சதா காலமும் நமது தேவன் - மரண Sathaa kaalamum namathu Thaevan - marana பரியந்தம் நம்மை நடத்திடுவார் Pariyantham nammai nadaththiduvaar 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் Kaarunyaththaalae izhuththukkondaar தூய தேவ அன்பே Thooya Thaeva anbae இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை Ivvanaanthiraththil nayangkaatti unnai இனிதாய் வருந்தி அழைத்தார் Inithaay varunthi azhaiththaar 2. கானக பாதை காரிருளில் Kaanaga paathai kaarirulil தூய தேவ ஒளியே Thooya Thaeva oliyae அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை Azhugai niraintha pallaththaakkugalai அரும் நீருற்றாய் மாற்றினாரே Arum neerutraay maatrrinaarae 3. கிருபை கூர்ந்து மனதுருகும் Kirubai koornthu manathurukum தூய தேவ அன்பே Thooya Thaeva anbae உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை Un samaathaanaththin udanpatikkai thanai உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வ...