செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள். உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஒருவர் இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள். ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி. 1761 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, 1793 ஆம் ஆண்டு கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்த இவர் திரும்பித் தன் தாய்நாட்டிற்கு சென்றதே இல்லை. 41 ஆண்டுகள் ஆண்டவரின் பணியை அரும்பாடுகள் பட்டு செவ்வனே செய்தார். பிரச்சினைகளும் போராட்டங்களும் இவர் வாழ்வில் பின்னிப் பிணைந்தது. தன் அருமை மனைவி மூளைக் கோளாறினால் பாதிக்கப்பட்டார். குழந்தையும் சுகவீனத்தால் இறந்துபோனது. சோதனைகளை சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தார் வில்லியம் கேரி. வங்காள மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். ஒரியா, மராத்தி, அச்சாமிஸ், சமஸ்கிரதம் ஆகிய மொழிகளிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். இதுமட்டுமல்லாது வேதாகமத்தின் பகுதிகளை 29 மொழிகளில் மொழிபெயர்த்தார். ஆசியாவில் செய்தித்தாள், நீராவியால் இயங்கும் எஞ்சின், சேமிப்பு வங்கி, தாவரவியல்...