ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை The hard life of Adam and Eve (Tamil Bible stories part 1,4)
ஆதாம் ஏவாளின் கஷ்டமான வாழ்க்கை தோட்டத்திற்கு வெளியே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. சாப்பாட்டுக்காக அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. சுற்றிவர அழகிய பழ மரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக ஏராளமான முள் செடிகளைத்தான் பார்த்தார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் நட்பை முறித்துக்கொண்டபோது அதுதான் நடந்தது. ஆனால் ஆதாம் ஏவாளுக்கு மோசமான வேறொன்றும் நடந்தது, ஆம், அவர்கள் குறிப்பிட்ட வயதிற்க்கப்புறம் சாகத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்று கடவுள் எச்சரித்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அவர்எச்சரித்தது போலவே, அதைச் சாப்பிட்ட அதே நாளிலிருந்து அவர்கள் சாகத் தொடங்கினார்கள். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்தார், சர்ப்பத்திற்க்கு நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய...