Posts

Showing posts from April 19, 2023

ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும். A good son and a bad son (Tamil Bible stories part 1,5)

Image
  ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும் காயீனும் ஆபேலும் வளர்ந்து விட்டார்கள். காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாக இருக்கிறான். தானியங்களையும் பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்கிறான்.ஆபேல் ஆடு மேய்ப்பவனாக இருக்கிறான்.ஆட்டுக்குட்டிகளைக் கவனிப்பது அவனுக்குப் பிடித்த வேலை. அவனுடைய ஆட்டுக்குட்டிகள் பெரிய ஆடுகளாக வளர்ந்து விடுகின்றன, இதனால் அவன் சீக்கிரத்தில் ஒரு பெரிய மந்தையையே மேய்க்க ஆரம்பிக்கிறான். ஒருநாள் காயீனும் ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்த வருகிறார்கள். காயீன் தான் பயிர் செய்த சில உணவுப் பொருட்களை எடுத்து வருகிறான். ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்த ஒரு ஆட்டை எடுத்து வருகிறான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து தேவன் சந்தோஷப்படுகிறார். ஆனால் காயீனையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து அவர் சந்தோஷப்படவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஆபேலின் காணிக்கை காயீனுடைய காணிக்கையைவிட மேலானதாய் இருப்பதால் அல்ல, ஆனால் ஆபேல் நல்லவனாக இருப்பதால்தான் தேவன் சந்தோஷப்படுகிறார். அவன் தேவனையும் தன்னுடைய அண்ணனையும் நேசிக்கிறான். காயீனோ கெட்டவனாக இருக்கிறான்; அவன் தன் தம்பியை நேசிக்கவ...