எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா --- எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல் தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் --- எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக , பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர --- எங்கே 5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் --- எங்கே 6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ --- எங்கே 7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து --- எங்கே