Posts

Showing posts from February 20, 2024

அப்பா உம் கிருபைகளால் என்னை Appa um kirubaikalal ennai tamil Christian song lyrics

  அப்பா உம் கிருபைகளால் என்னை காத்துக் கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிது தாழ்வில் நினைத்த கிருபையிது (2) தந்தையும் தாயும் கைவிட்டாலும் தயவாய் காக்கும் கிருபையிது (2) 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை விடுதலை கொடுத்த தேவ கிருபை (2) சூழ்நிலைகள் மாறினாலும் மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை (2) 3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை கண்ணீரை மாற்றின தேவ கிருபை (2) தடைகள் யாவையும் உடைத்து எறிந்து வெற்றியை தந்திட்ட தேவ கிருபை (2)

நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார் Noah builds an ark ( tamil Bible stories part 1,7 )

 நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார் Tamil Bible stories part 1  *  ஓர் அழகிய தோட்டம் *  K நோவாவுக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். மகன்களின் பெயர் சேம், காம், யாப்பேத். இந்த மூவரும் கல்யாணம் ஆனவர்கள். ஆகவே நோவாவின் குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர் இருந்தார்கள்.இப்பொழுது ஒரு புதுமையான காரியத்தைச் செய்யும்படி நோவாவிடம் கர்த்தர் சொன்னார். ஆம், ஒரு பெரிய பேழையைக் கட்டச் சொன்னார்.  இந்தப் பேழை ஒரு கப்பலைப் போல பெரிதாக இருந்தாலும் பார்ப்பதற்கு அது ஒரு நீளமான பெட்டியைப் போலவே இருந்தது. 'அதை மூன்று மாடி உயரத்திற்குக் கட்டு, அதில் அறைகளையும் உண்டாக்கு' என்று கடவுள் சொன்னார். நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும், மிருகங்களுக்கும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும் அந்த அறைகளைப் பயன்படுத்தச் சொன்னார். கர்த்தர்நோவாவிடம்: ‘தண்ணீர் உள்ளே புகுந்துவிடாத விதத்தில் பேழையைக் கட்டு' என்று சொன்னார். 'ஒரு பெரிய ஜலப்பிரளயத்தினால், அதாவது வெள்ளத்தினால் இந்த முழு உலகத்தையும் அழிக்கப் போகிறேன். பேழைக்குள் இல்லாதவர்கள் எல்லோரும் சாவார்கள்' என்றும் சொ...

பூமியில் இராட்சதர்கள் Giants on earth (Tamil Bible stories part 1,6)

  பூமியில் இராட்சதர்கள் மக்கள் பூமியில் பெருகத்தொடங்கிய போது, அவர்களில் பலர் காயீனைப் போல் கெட்ட காரியங்களைச் செய்தார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். அவர்தான் ஏனோக்கு. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவரைச் சுற்றியிருந்த எல்லா மக்களும் படு மோசமான காரியங்களைச் செய்து வந்தார்கள், என்றாலும் ஏனோக்கு தொடர்ந்து தேவனைச் சேவித்து வந்தார். அந்தக் கெட்ட மக்கள் மத்தியில் ஏனோக்கு நீண்ட காலம் வாழும்படி கர்த்தர் விட்டுவிடவில்லை. ஏனோக்கு 365 வயது மட்டுமே வாழ்ந்தார். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார் பின், அந்த மக்கள் மேலும் மேலும் மோசமானவர்களாக ஆனார்கள். அவர்களுடைய யோசனையெல்லாம் எப்பொழுதும் கெட்டதாகவே இருந்தது,' 'பூமி கொடுமையால் நிறைந்திருந்தது'. ஆதியாகமம் 5:21-24, 27; 6:5, 11-13; எபிரெயர் 11:5; யூதா 14, 15. உன் வீட்டின் உட்கூரை அளவுக்கு உயரமாக உள்ள ஒரு ஆள் உன் எதிரே - வந்துகொண்டிருக்கிறான் என்றால் உனக்கு எப்படியிருக்கும்? ரொம்ப பயமாக இருக்கும் இல்லையா? ஒரு காலத்தில் நிஜமாகவே அப்படிப்பட்டவர்கள...