Ootridume um vallavamiayai lyrics

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை - இந்த
நாளில் எங்கள் மேலே வல்லமையோடே
வல்லமை... வல்லமை... தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம்.. அபிஷேகம்.. ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட
பெந்தெகொஸ்தே நாளில் செய்து போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே
மாம்சமான யாவர்மேலும் ஊற்றுவேனென்ற
வாக்குத்தத்த ஆவியை ஊற்ற வேண்டுமே
நீச்சம் ஆழம் கொண்டு சென்று
நீந்தச் செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே
அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது