Aananthamae paramaananthamae song lyrics ஆனந்தமே பரமானந்தமே
ஆனந்தமே பரமானந்தமே
ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
Aananthamae paramaananthamae – iyaesu
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
Annalai andinoarkkaananthamae
1. இந்தப் புவி ஒரு சொந்தமல்ல வென்று
Inthap puvi oru sonthamalla venru
இயேசு என் நேசர் மொழிந்தனரே
Yaesu en naesar mozhinthanarae
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
Ikkattuth thunbamum iyaesuvin thondarkku
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும்
Inggaeyae panggaayk kidaiththidinum
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
Karththaavae neer enthan kaarunyak koattaiyae
காரணமின்றி கலங்கேனே யான்!
Kaaranaminri kalanggaenae yaan!
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
Visuvaasap paezhaiyil maeloagam vanthida
மேவியே சுக்கான் பிடித்திடுமே
Maeviyae sukkaan pidiththidumae
3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்
En ullamae unnil sanjalam aen veenaay
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
Kanneerin pallaththaakkalloa ithu
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
Seeyoan nagaraththil seekkiram senru naam
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்
Jeyageetham paadi magizhnthidalaam
4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
Koodaara vaasigalaagum namakkingu
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ
Veedenrum naadenrum sollalaamoa
கைவேலையல்லாத வீடொன்றை மேலேதான்
Kaivaelaiyallaatha veedonrai maelaethaan
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ
Seyvaen enach sollip poagalaiyoa
5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
Thunbanggal thollai idukkan idar ivai
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
Thondar emai andi vanthidinum
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
Solli mudiyaatha aaruthal kirubaiyai
துன்பத்தினூடே அனுப்பிடுவார்
Thunpaththinoodae anuppiduvaar
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
Iyaesuvae seekkiram iththarai vaarumaen
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேன்
Aezhai veguvaayk kalangugiraen
என் நேசர் தம்முக ஜோதியதேயல்லால்
En naesar thammuga joathiyathaeyallaal
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை
Inbam tharum porul aethumillai
Comments
Post a Comment