ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும். A good son and a bad son (Tamil Bible stories part 1,5)
ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்
காயீனும் ஆபேலும் வளர்ந்து விட்டார்கள். காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாக இருக்கிறான். தானியங்களையும் பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்கிறான்.ஆபேல் ஆடு மேய்ப்பவனாக இருக்கிறான்.ஆட்டுக்குட்டிகளைக் கவனிப்பது அவனுக்குப் பிடித்த வேலை. அவனுடைய ஆட்டுக்குட்டிகள் பெரிய ஆடுகளாக வளர்ந்து விடுகின்றன, இதனால் அவன் சீக்கிரத்தில் ஒரு பெரிய மந்தையையே மேய்க்க ஆரம்பிக்கிறான்.
ஒருநாள் காயீனும் ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்த வருகிறார்கள். காயீன் தான் பயிர் செய்த சில உணவுப் பொருட்களை எடுத்து வருகிறான். ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்த ஒரு ஆட்டை எடுத்து வருகிறான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து தேவன் சந்தோஷப்படுகிறார். ஆனால் காயீனையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து அவர் சந்தோஷப்படவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஆபேலின் காணிக்கை காயீனுடைய காணிக்கையைவிட மேலானதாய் இருப்பதால் அல்ல, ஆனால் ஆபேல் நல்லவனாக இருப்பதால்தான் தேவன் சந்தோஷப்படுகிறார். அவன் தேவனையும் தன்னுடைய அண்ணனையும் நேசிக்கிறான். காயீனோ கெட்டவனாக இருக்கிறான்; அவன் தன் தம்பியை நேசிக்கவில்லை. எனவே காயீன் திருந்த வேண்டுமென்று கடவுள் அவனிடம் சொல்கிறார். ஆனால் காயீன் அதைக் கேட்கவே இல்லை. தன்னைவிட ஆபேலை கர்த்தர் அதிகமாக விரும்பியதால் அவனுக்குக் கோபம் கோபமாக வருகிறது.
ஒருநாள் அவன் ஆபேலிடம்: ‘நாம் இருவரும் வயல் வெளிக்குப் போகலாம் வா' என்று கூப்பிடுகிறான். அங்கே, அவர்கள் தனியாக இருக்கையில் காயீன் தன் தம்பி ஆபேலை அடித்துப் போடுகிறான். அடித்த அடியில் அவன் செத்தே போய் விடுகிறான். காயீன் தன் தம்பியைக் கொன்றது எவ்வளவு மோசமான காரியம் இல்லையா?
ஆபேல் இறந்துவிட்டாலும், அவனைக் கரத்தர் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். ஆபேல் நல்லவனாக இருந்தான். இப்படிப்பட்ட ஓர் ஆளை தேவன் ஒருபோதும் மறப்பதில்லை. எனவே, ஆபேலை தேவன் ஒருநாள் திரும்ப உயிருக்குக் கொண்டு வருவார். அதன் பிறகு அவன் மறுபடியும் சாக வேண்டியிருக்காது. அவன் பரலோகத்தில் என்றென்றுமாக அவன் வாழ்வான்.
கர்த்தர் காயீனிடம் உன் தம்பி ஆபேல் எங்கே என்று கேட்டார்.அவன் தன் தவறை மறைக்க எனக்கு தெரியாதுஎன் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்று கர்த்தரிடமே கேட்டான். ஆனால் கர்த்தர் அவனிடம் என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றுக் கேட்டார்.
மறுபடியும் அவனிடம் உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீசபிக்கப்பட்டிருப்பாய் என்றும் நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
அப்பொழுது தான் காயீன் தன் தவறை உணர்ந்து கர்த்தரிடம் எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்று கெஞ்சினான்.
கர்த்தர் அவனுக்காக மனஸ்தாபபட்டு காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்று போடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.அப்படியேகாயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
ஆதியாகமம் 4:2-26; 1 யோவான் 3:11, 12; யோவான் 11:25.

Comments
Post a Comment