தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள் Adam and Eve are chased out of that beautiful garden of Eden. Do you know why? (Tamil Bible stories part 1.3)

 தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்








ஆதாமும் ஏவாளும் அந்த அழகிய ஏதேன் தோட்த்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியவில்லை. அதனால் அவர்களை தேவன் தண்டிக்கிறார். ஆதாமும் ஏவாளும் செய்த அந்த காரியம் என்னவென்று உனக்குத் தெரியுமா? செய்ய வேண்டாம் என்று தேவன் சொன்ன ஒன்றை அவர்கள் செய்தார்கள்.

அந்தத் தோட்டத்தின் மரங்களிலிருந்து கிடைக்கிற பழங்களை அவர்கள் சாப்பிடலாம் என்று தேவன் அவர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால் நன்மை தீமை அறியதக்க மரத்திலிருந்து மட்டும் பழத்தை சாப்பிடக் கூடாது என்றும், அப்படிச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப் போய் விடுவார்கள் என்றும் அவர் சொல்லியிருந்தார்.

ஒருநாள் ஏவாள் தனியாகத் தோட்டத்தில் இருந்தாள், அப்போது ஒரு சர்ப்பம் அவளிடம் பேசியது. அதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்! சாப்பிடக் கூடாது என்று தேவன் சொன்ன அந்த மரத்திலிருந்த பழத்தைச் சாப்பிடும்படி அது ஏவாளிடம் சொன்னது. சர்ப்பத்தை உண்டாக்கியபோது பேசும் திறமையுடன் அவற்றை உண்டாக்கவில்லை. அப்படியானால், யாரோ ஒருவன்தான் அந்தப் சர்ப்பத்தைப் பேச வைத்திருக்க வேண்டும்.

அவன் யார்? அவன் ஆதாம் அல்ல. அப்படியானால், அவன் யார்? தேவன் இந்தப் பூமியை உண்டாக்குவதற்கு முன்பே உண்டாக்கிய தேவதூதர்களில் ஒருவனாகத்தான் அவன் இருக்க வேண்டும், அந்தத் தேவதூதர்களை நம்மால் பார்க்க முடியாது. அவர்களில் ஒருவன் ரொம்ப பெருமை பிடித்தவனாக இருந்தான். கடவுளைப் போல தானும் அரசாட்சி செய்ய வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். மனிதர்கள் தேவனுக்கு கீழ்ப்படிவதற்குப் பதிலாகத் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் ஆசைப்பட்டான். ஆம், அந்தப் சர்ப்பத்தைப் பேச வைத்த தூதன் அவன்தான்.அந்தத் தூதன் ஏவாளை ஏமாற்றினான். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் தேவர்களைப் போல் ஆக முடியுமென்று அவளிடம் சொன்னான். அது உண்மையென்று நம்பி அவளும் அதைச் சாப்பிட்டாள், ஆதாமும் அதைச் சாப்பிட்டான். இவ்வாறு ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இதனால்தான் அவர்கள் தங்கள் அழகிய தோட்ட வீட்டை இழந்தார்கள்.

ஆதியாகமம் 2:16, 17; 3:1-13, 24; வெளிப்படுத்துதல் 12:9.


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது