பூமியில் இராட்சதர்கள் Giants on earth (Tamil Bible stories part 1,6)
பூமியில் இராட்சதர்கள்
மக்கள் பூமியில் பெருகத்தொடங்கிய போது, அவர்களில் பலர் காயீனைப் போல் கெட்ட காரியங்களைச் செய்தார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். அவர்தான் ஏனோக்கு.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவரைச் சுற்றியிருந்த எல்லா மக்களும் படு மோசமான காரியங்களைச் செய்து வந்தார்கள், என்றாலும் ஏனோக்கு தொடர்ந்து தேவனைச் சேவித்து வந்தார்.
அந்தக் கெட்ட மக்கள் மத்தியில் ஏனோக்கு நீண்ட காலம் வாழும்படி கர்த்தர் விட்டுவிடவில்லை. ஏனோக்கு 365 வயது மட்டுமே வாழ்ந்தார். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்
பின், அந்த மக்கள் மேலும் மேலும் மோசமானவர்களாக ஆனார்கள். அவர்களுடைய யோசனையெல்லாம் எப்பொழுதும் கெட்டதாகவே இருந்தது,' 'பூமி கொடுமையால் நிறைந்திருந்தது'.
ஆதியாகமம் 5:21-24, 27; 6:5, 11-13; எபிரெயர் 11:5; யூதா 14, 15.
உன் வீட்டின் உட்கூரை அளவுக்கு உயரமாக உள்ள ஒரு ஆள் உன் எதிரே - வந்துகொண்டிருக்கிறான் என்றால் உனக்கு எப்படியிருக்கும்? ரொம்ப பயமாக இருக்கும் இல்லையா? ஒரு காலத்தில் நிஜமாகவே அப்படிப்பட்டவர்கள் பூமியில் இருந்தார்கள். அவர்கள்தான் இராட்சதர்கள். தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால்பிறந்தவர்கள்.
ஆனால் அது எப்படி முடியும்? கெட்ட தூதனான சாத்தான் பிரச்சினைகளை உண்டாக்குவதில் மும்முரமாக இருந்தான் என்பது நினைவிருக்கிறதா? கரத்தருடைய தூதர்களையும்கூட அவன் கெடுக்க முயன்று கொண்டிருந்தான். காலப்போக்கில் இந்தத் தூதர்களில் சிலர் சாத்தான் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். பரலோகத்தில் கடவுள் தங்களுக்குக் கொடுத்திருந்த வேலையை விட்டுவிட்டு, மனித உருவில் கீழே பூமிக்கு வந்தார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஏனென்றால், கரத்தருடைய இந்தக் குமாரர்கள் பூமியிலிருந்த அழகிய பெண்களைப் பார்த்து, அவர்களோடு வாழ ஆசைப்பட்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. எனவே அவர்கள் பூமிக்கு வந்து அந்தப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஆனால், அது தவறு என்று பைபிள் சொல்கிறது, ஏனென்றால் பரலோகத்தில் வாழ்வதற்காகத்தான் தேவதூதர்களைக் கடவுள் உண்டாக்கியிருந்தார்.பூமிக்கு வந்திருந்த தூதர்களின் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகள் வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் அப்படியொன்றும் வித்தியாசமானவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் போகப் போக அவர்கள் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து, பயங்கர பலவான்களாக ஆகி, கடைசியில் இராட்சதர்களாக ஆனார்கள்.
இந்த இராட்சதர்கள் கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வளவு உயரமானவர்களாகவும் பலவான்களாகவும் இருந்ததால் மக்களைப் பாடாய்ப் படுத்தினார்கள். தங்களைப் போலவே எல்லோரும் கெட்ட காரியங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.அச்சமயத்தில் ஏனோக்கு உயிரோடில்லை, ஆனால் நல்லவர் ஒருவர் பூமியில் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் நோவா. தன்னிடம் கடவுள் எதைச் செய்யச் சொன்னாரோ அதையே அவர் எப்பொழுதும் செய்து வந்தார்.
ஆதியாகமம் 6:1-8; யூதா 6.
Comments
Post a Comment